கார்த்தி சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன்
கார்த்தி சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன்pt web

“திமுக இல்லையென்றால் கார்த்தி சிதம்பரம் டெபாசிட்கூட வாங்கியிருக்க மாட்டார்” - ஈவிகேஎஸ் இளங்கோவன்

கார்த்தி சிதம்பரம் சுயநலத்துடன் பேசிவருகிறார் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அக்னீ பரீட்சைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி அளித்தார்.
Published on

புதிய தலைமுறையின் அக்னி பரிட்சை நிகழ்ச்சியில், ‘செல்வப்பெருந்தகை பேச்சோ, கார்த்தி சிதம்பரம் பேச்சோ கூட்டணிக்கு ஊறுவிளைக்கும் பேச்சாக இருக்கிறதா?’ என்ற நெறியாளரின் கேள்விக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், “கண்டிப்பாக. கார்த்தி சிதம்பரத்திற்கே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தேர்தலுக்கு முன் சிவகங்கையில் இருந்த அத்தனை காங்கிரஸ்காரர்களும், டெல்லிக்கு சென்று கார்த்திகிற்கு இடம்கொடுக்கக்கூடாது என்றனர்.

கார்த்தி சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன்
“அண்ணாமலை அரசியல் உண்மைகளை அறிந்திருக்கவில்லை” – கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

சிதம்பரத்திற்காக பல எதிர்ப்புகளை மீறி அவர்களுக்கு வாய்ப்பு தந்தனர். முழுக்க முழுக்க திமுகதான் அங்கு உழைத்தது. காங்கிரஸிலே மாவட்ட தலைவர்களாக இருந்தவர்கள், வட்டார தலைவர்களாக இருந்தவர்கள் யாரும் வேலை செய்யவில்லை. ஓட்டு போட்டார்களா இல்லையா என்பதுகூட தெரியாது. திமுக அவருக்கு உதவி செய்யவில்லை என்றால் டெபாசிட் பெறுவதுகூட பெரிய விஷயமாக இருந்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com