“அண்ணாமலை அரசியல் உண்மைகளை அறிந்திருக்கவில்லை” – கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

“மாநில உரிமைகளை மதிக்கக் கூடிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் பல்வேறு மாநிலங்களில் பறிக்கப்பட்ட உரிமைகளும், திட்டங்களும் திரும்ப கொடுக்கப்படும்” என்று கார்த்தி சிதம்பரம் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார்.
கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்puthiya thalaimurai

செய்தியாளர்: நாசர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய தலைமுறைக்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் நேற்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று அண்ணாமலையின் பிறந்தநாள். அதற்கு எனது வாழ்த்துகள். அண்ணாமலை அரசியல் உண்மைகளையும், தனது உயரத்தையும் அறிந்திருக்கவில்லை. அதனால்தான் படுதோல்வியை சந்தித்துள்ளார்.

நான் பதவியேற்ற பின் செய்யும் முதல் நடவடிக்கை சிவகங்கை மற்றும் பொன்னமராவதி பேருந்து நிலையங்களை மேம்படுத்துவதுதான். நீண்ட நாள் கிடப்பில் கிடக்கும் ரயில்வே திட்டத்தையும் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வேன்.

கார்த்தி சிதம்பரம்
”எனக்கு கொடுக்கப்பட்ட வேலை கட்சியை வளர்ப்பதுதான்” - தேர்தல் முடிவுகள் குறித்து அண்ணாமலை விளக்கம்!

மாநில உரிமைகளை மதிக்கக் கூடிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் பல்வேறு மாநிலங்களில் பறிக்கப்பட்ட உரிமைகளும், திட்டங்களும் திரும்ப கொடுக்கப்படும்” என்று கூறினார்.

இதுதொடர்பாக அவர் பேசிய காணொளியை, இங்கே காணலாம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com