கூரை மீதேறி சுத்தம் செய்த மாணவர்கள்
கூரை மீதேறி சுத்தம் செய்த மாணவர்கள்pt desk

ஈரோடு: அரசுப் பள்ளியின் கூரை மீதேறி சுத்தம் செய்த மாணவர்கள் - வைரலாகும் புகைப்படம்

ஈரோடு அருகே பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி அரசுப் பள்ளியின் கூரை மீது ஏறி மாணவர்கள் சுத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஓட்டு கட்டடம் ஒன்றில் அங்கு பயிலும் பள்ளி மாணவர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அதன் மேல் ஏறி சுத்தம் செய்திருக்கின்றனர். மாணவர்கள் சுத்தம் செய்யும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளிpt desk

மேலும் பள்ளி மாணவர்களை பள்ளியில் எந்த ஒரு பணிக்கும் ஈடுபடுத்தக் கூடாது என அரசு உத்தரவு இருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களை பாதுகாப்பற்ற முறையில் ஓட்டு கட்டடம் மீது ஏறி அதனை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கூரை மீதேறி சுத்தம் செய்த மாணவர்கள்
சென்னை: திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டாக்டர்

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாரவிடம் கேட்டபோது... என்.எஸ்.எஸ் மாணவர்கள் சுத்தம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற பணியில் மாணவர்கள் பயன்படுத்தக் கூடாது என அறிவுருத்தியிருக்கிறோம். இதனால் பொறுப்பு தலைமையாசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com