ஈரோடு கிழக்கு தொகுதி முகநூல்
தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. இன்று தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதையடுத்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதையடுத்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டெல்லி சட்டப்பேரவை தேர்தலோடு சேர்த்து, பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.