“நல்ல வேளை காவி உடையில் வரல” “எங்களுக்கு வாய்ப்பு இல்லை” - பேரவையில் நடந்தது என்ன? - இபிஎஸ் விளக்கம்

” அவையின் மரபின்படி பிரதான எதிர்க்கட்சிக்கு முதல் வாய்ப்பு தர வேண்டும். “ - இபிஎஸ்

தமிழக சட்டமன்றத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானியக்கோரிக்கை இன்று (ஏப்ரல் 8) நடைபெற்றது.

இந்தநிலையில், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையில் அவைக்கு வந்துள்ளனர்.

சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தின் போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பவில்லை என்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு போதுமான நேரம் ஒதுக்குவதில்லை என்று குற்றம்சாட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இபிஎஸ்
மதுரை | 'குயின் டிரேடிங்' பங்குச்சந்தையில் முதலீடு எனக் கூறி ரூ.24 கோடி மோசடி – காவலர் மீது புகார்

அதன்பின்னர் முதல்வர் ஸ்டாலின் அவையில் பேசும்போது, “எதிர்கட்சியாக இருக்கும் அதிமுகவினர் இன்று கருப்பு சட்டை அணிந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருப்பதால் நான் எனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல வேளை காவி உடை அணியாமல், கருப்பு உடை அணிந்து வந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இபிஎஸ், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசினார். மேலும், இதுகுறித்து அவர் பேசியது என்ன?.. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com