EPS, Dr.Krishnasamy
EPS, Dr.Krishnasamypt desk

“அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக முடக்கிவிட்டது” – எடப்பாடி பழனிசாமி பேச்சு

“அதிமுக கொடுத்த அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக-வினர் செயல்படுத்தினர். விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடிய கட்சி திமுக, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கிவிட்டது” என தேர்தல் பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
Published on

செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு சங்கரன்கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசியபோது....

ADMk Alliance
ADMk Alliancept desk

“அதிமுக கூட்டணியை பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டது. விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடிய கட்சி திமுக. அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக முடக்கிவிட்டது. திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் மின்சார கட்டணம், விலைவாசி உயர்ந்து விட்டது.

EPS, Dr.Krishnasamy
Election With PT | "துரை வைகோவின் பேச்சு அநாகரீகமானது, அருவருக்கத்தக்கது" - நாஞ்சில் சம்பத்

அதிமுக கொடுத்த அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக-வினர் செயல்படுத்தினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்தது திமுகதான். அதனை விரிவாக்கம், செய்தது ஸ்டாலின்தான். அதிமுக ஆட்சியில் பதினொறு மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம், திமுக ஸ்டாலினால் முடிந்ததா?” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com