புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செயலாற்ற வேண்டும் - தொண்டர்களுக்கு இபிஎஸ் மடல்

புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி அதிமுகவினர் செயலாற்ற வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
EPS
EPSptweb

அதிமுகவின் 52 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மடல் எழுதியுள்ளார். அதில், “கடந்த 29 மாத கால திமுக ஆட்சி, தமிழ்நாட்டின் உரிமைகளை காவுகொடுத்து மக்களின் வாழ்வை துயர்மிகுந்ததாக மாற்றிவிட்து.

admk and dmk
admk and dmkpt desk

மின்கட்டணம், பால் விலை உயர்வு என மக்களை சொல்லொணாத் துயரில் திமுக அரசு ஆழ்த்தி இருக்கிறது. கள்ளச் சாராயமும், கஞ்சா புழக்கமும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி விட்டது. ஒரு குடும்பம் தமிழ்நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறது.

இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம். மக்களை நம்பி அதிமுக தேர்தலை சந்திக்க விருப்புகிறது. புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது என்ற வெற்றிச் செய்திதான் தமிழ்நாட்டை தீய சக்திகளிடம் இருந்து மீட்கும் முழக்கமாக இருக்கும் என்பதை மனதில் நிறுத்தி தேர்தல் பணியாற்ற வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

CM Stalin
CM Stalinpt desk

மேலும் “52ஆவது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கும் நன்நாளில் ஆளுமைத் திறனற்ற ஆட்சியாளர்களின் ஊழல் ஆட்சிக்கு முடிவுரை எழுதிட உறுதியேற்போம்” என தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com