எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிpt web

அண்ணா பல்கலை. விவகாரம் | “வெட்கக்கேடானது.. சிபிஐ விசாரணை வேண்டும்” - கேள்விகளை அடுக்கிய இபிஎஸ்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 30ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்... வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...
Published on

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 30ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்ட அறிவித்துள்ளது.

தமிழகத்தை உலுக்கும் சம்பவம்: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தை உலுக்கும் சம்பவம்: எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணா பல்கலை.யில் நடந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. கைதான ஞானசேகரன் இன்னொரு சார் என்று ஒருவரை குறிப்பிட்டதாக பாதித்த மாணவி புகாரில் தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்பு என்று காவல் ஆணையர் கூறுகிறார். அந்த சார் யார் என்பதை இதுவரை காவல் துறை வெளிக்கொண்டு வரவில்லை. அந்த சார் என்பதை காவல் துறை மறைக்கிறது; இது கண்டிக்கத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கும் கல்லூரி ஒன்றில் எப்படி இவர் அடிக்கடி நுழைந்து வளாகத்தில் சுற்றித்திரிய முடியும். எந்தப்பாதுகாப்பும் இல்லாத சூழல் இருக்கிறது. பெற்றோர்களே அச்சப்படுகிறார்கள். அரசை நம்பித்தான் பெற்றோர்கள் மாணவிகளை கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். அண்ணா பல்கலை.யில் 70 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், 56 சிசிடிவி கேமராக்கள் மட்டுமே வேலை செய்வதாக தெரிவிக்கின்றனர். மற்ற சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்று கூறுவது வெட்கக்கேடானது.

டிச. 30இல் அதிமுக ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
டிச. 30இல் அதிமுக ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.

ஞானசேகரன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி., அவர்மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. சில வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சில வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சரித்திர பதிவேட்டில் உள்ள குற்றவாளி எப்படி தங்கு தடையில்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடமாட முடியும். எப்படி அனுமதித்தார்கள். காவல்துறை உயரதிகாரியும், அமைச்சரும் முரண்பட்ட கருத்துகளைச் சொல்கின்றனர். உண்மைநிலை மக்களுக்கு தெரிய வேண்டுமானால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பேசிய முழு வீடியோ இங்கே..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com