கே. பழனிசாமி
கே. பழனிசாமிPt web

3-ம் கட்ட தேர்தல் அறிக்கை | ”ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் தரப்படும்” - கே. பழனிசாமி!

அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கருணைத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் தரப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Published on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் விழா இன்று சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாப்பட்டது. இவ்விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின் 3 ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

கே. பழனிசாமி
கே. பழனிசாமிகோப்பு படம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி அரசியல் களம் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள அதிமுக - பாஜக, அமமுக, பாமக (அன்புமணி தரப்பு) உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இந்த சூழலில் தான் ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். இந்தநிலையில், இன்று 3 ஆம் கட்ட தேர்தல் வாக்குறிகளை அறிவித்திருக்கிறார்.

கே. பழனிசாமி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள்.. மோடி, அமித் ஷா புகழாரம்!

அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி 3-ம் கட்ட தேர்தல் அறிக்கையை அறிவித்து பேசும்போது, திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்திருக்கிறது. அதேபோல, மின்கட்டணம், சொத்துவரி, குடிநீர் வரி போன்றவையும் திமுக அரசு உயர்த்தியிருக்கிறது. எனவே, தமிழக மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், அதிமுக அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கு 10,000 ரூபாய் கருணைத்தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின், கே. பழனிசாமி
ஸ்டாலின், கே. பழனிசாமிpt web

தொடர்ந்து, ”ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும். வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்க மாதம் ரூ.2000 வழங்கப்படும். வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்க மாதம் ரூ.2000 வழங்கப்படும். 12-ம் வகுப்பு வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்க மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும். தெருவோர வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ. 8,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும். விசைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்” உள்ளிட்ட வாக்குறுதிகளையும் கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com