ஜெயலலிதா
ஜெயலலிதாPt web

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள்.. மோடி, அமித் ஷா புகழாரம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அவரை நினைவு கூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
Published on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கருணை மற்றும் உறுதி என்ற இரண்டு பண்புகளைக் கொண்டிருந்தவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.

ஜெயலலிதா
ஜெயலலிதாPt web

அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா
அனுமதி கடிதம் தாமதம் | “தவெக நிர்வாகிகள் கூறியது உண்மைக்குப் புறம்பானது” - வேலூர் காவல்துறை!

தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா-வின் எக்ஸ் தளப்பதிவில், ”முன்னாள் தமிழக முதல்வரும் மக்கள் தலைவருமான ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலிகள். ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்தார். பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா
எஸ்.ஐ.ஆர் | வெளியானது தமிழ்நாட்டின் இறுதி வாக்களர் பட்டியல்.. எத்தனை பேர் நீக்கம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com