"24 மணி நேரமும் செயலாற்றிட வேண்டும்" - பருவமழை முன்னெச்சரிக்கை.. Alert கொடுத்த மின்துறை அமைச்சர்!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
பருவமழை முன்னெச்சரிக்கை
பருவமழை முன்னெச்சரிக்கைபுதிய தலைமுறை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் மின்துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொறியாளர்களுடன் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு நடத்தினார். 

பருவமழை முன்னெச்சரிக்கை
திருச்சி: இடி தாக்கியதில் வெடித்த செல்போன்; நாற்று நட்ட பெண்களில் மூவர் காயம்

அக்கூட்டத்தில் பேசிய அவர், ” மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து,  உதவி செயற்பொறியாளர்கள் 24 மணி நேரமும் செயலாற்றிட வேண்டும். மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு குழுவிற்கு 15 பணியாளர்கள் வீதம், ஐந்தாயிரம் பேரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருப்பதையும், தேவைப்படும் அனைத்து தளவாடப் பொருட்களையும் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மின் தடங்கல் ஏற்பட்டால் முன்னுரிமை அடிப்படையில் மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும்.  பேரிடர் காலங்களில் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களை அடையாளம் கண்டு தயார் நிலையில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் .

பொதுமக்கள் மின்தடை தொடர்பான புகார்களை 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும். மழைக்காலங்களில் பொதுமக்கள் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் கையாளுவது மிகவும் அவசியம். மேலும் குறிப்பாக அறுந்து கிடக்கும் மின் கம்பிகளின் அருகில் செல்ல வேண்டாம் “ என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com