திருச்சி: இடி தாக்கியதில் வெடித்த செல்போன்; நாற்று நட்ட பெண்களில் மூவர் காயம்

திருச்சி அருகே வயல்வெளியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இடி, மின்னல் தாக்கியதில் செல்ஃபோன் வெடித்து மூன்று பெண்கள் காயமடைந்தனர்.

துவரங்குறிச்சி அருகே இடி தாக்கியதில் செல்போன் வெடித்து 3 பெண்கள் காயமடைந்தனர். சின்ன கோனார் பகுதியில் வயலில் நாற்று நடும் பணியில் பெண்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, இடி தாக்கியதில் மணிமேகலை என்பவர் இடுப்பில் வைத்திருந்த செல்போன் வெடித்தது. அதில், மணிமேகலைக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் அருகே இருந்த மேலும் 2 பெண்களுக்கும் காயம் ஏற்பட்டது. மூவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com