நெருங்கும் மக்களவை தேர்தல்... திமுக - காங்கிரஸ் 28ம் தேதி பேச்சுவார்த்தை

தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 28 ஆம் தேதி திமுக - காங்கிரஸ் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
திமுக- காங்கிரஸ்
திமுக- காங்கிரஸ்புதிய தலைமுறை

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 28 ஆம் தேதி திமுக - காங்கிரஸ் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் கூட்டணிக்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு அமைத்தும் தீவிரம் காட்டிவருகின்றன. அதில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தங்களின் தொகுதி பங்கீடு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு போன்றவற்றை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் வருகின்ற ஜனவரி 28 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் மாலை 3 மணி அளவில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களின் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தேர்தல் கட்சி பணிகளை ஒருங்கிணைக்க திமுக 3 குழுக்களை அமைத்தது. அதில் மக்களவை தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கு டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தற்போது இந்த குழு காங்கிரஸ் கமிட்டியின் வருகின்ற 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் காங்கிரஸூக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் இதே தொகுதிகளை காங்கிரஸ் இம்முறையும் பெறுமா? இல்லை மாற்றம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

நேற்றைய தினம் இந்திய தேர்தல் தலைமை அதிகாரி அனைத்து மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகளுக்கும் வரைவு திட்டத்தினை அனுப்பினார். அதன்படி நாடாளுமன்ற மக்களவை தேர்தலை வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றவாறு தேர்தல் பணிகளை வகுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது கூடுதலான தகவல்.

திமுக- காங்கிரஸ்
ஏப்ரல் 16ல் மக்களவைத் தேர்தல்? - இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த அறிவுறுத்தல்கள் என்ன?

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com