காலியாகும் அன்புமணி உள்ளிட்டோரின் பதவிகள்; அடுத்த எம்.பிக்கள் யார் யார்? வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரசேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைய போகிறது.
இந்தவகையில், காலியாக உள்ள 6 எம்பி பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஜூன் 2ஆம் தேதி அறிவிப்பாணை வழங்கப்படும். ஜூன் 9ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஜூன் 10 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூன் 12 ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம்.
இந்தவகையில், திமுகவிற்கு 4 எம்பிக்களும், அதிமுக கூட்டணிக்கு 2 எம்பிகளும் கிடைக்க வாய்ப்பு அதிகம்.
மேலும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக (வைக்கோவிற்கு) 1 சீட்டு கொடுக்கவேண்டும் எனவும், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவிற்கு 1 மாநிலங்களவை சீட் வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவரும்நிலையில், வழங்கப்படுமா என்பதும் தெரியவரும். மேலும், திமுக சார்பில் மநீக கமல்ஹாசனும் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதற்கான பதில்கள் இதில் கிடைக்கும். எனவே, அரசியல் ரீதியாக இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.