இடைத்தேர்தலில் சீமானுக்கு என்ன சின்னம்? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்!

ஜூலை பத்தாம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது முதலே விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
சீமான்
சீமான்pt web

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சத்யபிரதா சாஹூ, “தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள் இருக்காது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களைத் தொடரலாம். மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் தொடரும். பணம் கொண்டு செல்வதற்கான வரம்பு 50,000 ரூபாய் மட்டுமே. பொதுத்தேர்தலில் இருந்ததைப்போல கட்டுப்பாடுகள் தொடரும்” என்றார்.

நாதக சின்னம் என்ன?

மேலும், “சோதனை நடவடிக்கை மற்றும் மாவட்ட எல்லை கண்காணிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். CISF பாதுகாப்பு வீரர்கள் தேர்தல் பணிக்கு வருவார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்திய இயந்திரம் இதற்கு பயன்படுத்தப்படாது.

தமிழகத்தில் விசிக, நாம் தமிழர் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டதை தலைமைத் தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். அதன் பின்னரே இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்குவது பற்றி முடிவெடுக்கப்படும்” என்றார் அவர்.

சீமான்
கரடுமுரடான அரசியல் களம்... 25 ஆண்டுகால கனவான அரசியல் அங்கீகாரம்... விசிக சாதித்த வரலாறு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் நிலையில் வேட்பு மனு தாக்கல் ஜூன் 21 ஆம்தேதி முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, ஜூன் 24 ஆம்தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசிநாள் ஜூன் 26 ஆம்தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினரான புகழேந்தி, கல்லீரல் புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றபோது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு காலமானார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் விக்கிரவாண்டி சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டு அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டன.

சீமான்
மைக்கை சுழற்றிய சீமான்...! அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகிறதா நாதக?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com