தண்டவாளத்தை கடக்க முயன்ற மூத்த தம்பதியர் உயிரிழப்பு
தண்டவாளத்தை கடக்க முயன்ற மூத்த தம்பதியர் உயிரிழப்பு pt desk

செங்கல்பட்டு: ரயில் மோதிய விபத்து - தண்டவாளத்தை கடக்க முயன்ற மூத்த தம்பதியர் உயிரிழப்பு

மறைமலை நகரில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூத்த தம்பதிகள் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்வேலன் (65) மற்றும் அவரது மனைவி பசும்பொன் (59) ஆகிய இருவரும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்வதற்காக மறைமலை நகர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர்.

Railway Police station
Railway Police stationpt desk

அப்போது சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற விரைவு ரயில், வயதான தம்பதிகள் மீது மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்டவாளத்தை கடக்க முயன்ற மூத்த தம்பதியர் உயிரிழப்பு
ஆந்திரா டூ சென்னை: மூதாட்டியை கொலை செய்து சூட்கேஸில் எடுத்து வந்த தந்தை மகள் கைது

இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com