தந்தை மகள் கைது
தந்தை மகள் கைதுpt desk

ஆந்திரா டூ சென்னை: மூதாட்டியை கொலை செய்து சூட்கேஸில் எடுத்து வந்த தந்தை மகள் கைது

ஆந்திராவில் மூதாட்டியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து சென்னைக்கு ரயிலில் எடுத்து வந்த தந்தை மகள் ஆகிய இருவரையும் கைது செய்த கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Published on

செய்தியாளர்: எழில்

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (43). இவரது மகள் தேவிஸ்ரீ (17). இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது பெரிய அளவிலான சூட்கேசுடன் இறங்கிய இருவரும் சூட்கேஸை கீழே வைத்து விட்டு நடந்து சென்றுள்ளனர்.

சூட்கேஸ்
சூட்கேஸ்கோப்புப்படம்

இதைக் கண்ட ரயில் பயணிகள் சிலர், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரியிடம் சூட்கேஸை வைத்து விட்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த அதிகாரி சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர்.

தந்தை மகள் கைது
மதுரை: பட்டாசு வெடித்த 4 குழந்தைகளுக்கு பறிபோன பார்வை - அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவல்

அப்போது அதில், 60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் தலையில் காயத்துடன் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்து கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com