அழிந்து வரும் சேவல் இனங்களை மீட்டெடுக்கும் முயற்சி - ரூ.5 லட்சம் வரை விற்பனையான சேவல்கள்

அழிந்து வரும் அரிய வகை கிளி மூக்கு விசிறிவால் சேவலை மீட்டெடுக்க திண்டுக்கல்லில் கண்காட்சி நடைபெற்றது. இதில், 400க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்ற நிலையில், ரூ.5 லட்சத்திற்கு அவை விற்பனையாகின.
Roosters
Roosterspt desk

செய்தியாளர் - விஜயபாண்டியன்

-----------

தமிழகத்தில் சேவல் இனங்களில் அரிய வகையான கிளிமூக்கு விசிறிவால் சேவல் இனம் தற்போது மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இந்த சேவல் இனத்தை பாதுகாக்கவும், அழிவிலிருந்து மீட்டெடுக்கவும், மக்கள் மத்தியில் சேவல் வளர்ப்பை தூண்டவும் திண்டுக்கல்லில் குடைபாறைபட்டியில் இன்று (07.01.24) கிளி மூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி நடைபெற்றது.

Public
Publicpt desk

இந்த கண்காட்சியில் கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. 2 - 3 அடி நீளம், 2 அடி உயரம், 2 - 6 கிலோ எடை உள்ள சேவல்கள் கண்காட்சியில் பங்கேற்றன. இந்த கண்காட்சியில் சேவல்களின் தரத்திற்கு ஏற்ப அவை ரூ.15 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விற்பனையாகின. சேவல் குஞ்சுகள் 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

Roosters
“இனி சென்னை மட்டுமே வளர்ச்சிபெறுகிறது என யாரும் சொல்லமாட்டார்கள்!” - அமைச்சர் TRB ராஜா

இந்த கண்காட்சியைக் காண தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்து பார்வையிட்டு சேவல்களை வாங்கிச் சென்றனர். கண்காட்சியில் பங்கேற்ற சேவல்களின் எடை, உயரம், வாலின் நீளம், கிளி மூக்கு வளர்ச்சி, இறக்கை விரிப்பு போன்றவற்றைக் கொண்ட சிறந்த 100 சேவல்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com