“இனி சென்னை மட்டுமே வளர்ச்சிபெறுகிறது என யாரும் சொல்லமாட்டார்கள்!” - அமைச்சர் TRB ராஜா

எதிர்பார்த்ததைவிட முதலீட்டாளர் மாநாடு சிறப்பாக நடந்து வருவதாக் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் TRB ராஜா
அமைச்சர் TRB ராஜாபுதிய தலைமுறை

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே “உலக முதலீட்டாளர் மாநாடு 2024” சென்னையில் இன்று தொடங்கியது. பல சர்வதேச நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள உள்ளன. இன்றும் நாளையும் இம்மாநாடு நடக்கவிருக்கிறது.

மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். உடன் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழில்நிறுவனத் தலைவர்களும், 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி ஹீண்டாய், ஓலா, கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது தொழிற்சாலைகளை அமைக்கவும் அதனை விரிவுபடுத்தவும் முதலீடுகளை வழங்குகின்றன. இதன்மூலம் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெருகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் TRB ராஜா
“உலகிலேயே முதலீடு செய்ய சிறப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”- உலக முதலீட்டாளர் மாநாட்டில் மத்திய அமைச்சர்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இந்தியாவில் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டார்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் வளர்ச்சி பெறும்!

மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “இந்தியாவில் 2ஆவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாடு விளங்குகிறது.

அமைச்சர் TRB ராஜா
முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - ஓர் பார்வை!

வாகனம், டயர் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளோம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு பொருட்களில் 30% பொருட்கள் இங்கு உற்பத்தியாகின்றன. கடந்த ஆண்டு மொத்தமாக 44 ஆயிரத்து 673 கோடி ரூபாய் அளவுக்கு மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை மட்டும் 46 ஆயிரத்து 587 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது” என்று பேசினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “எதிர்பார்த்ததைவிட முதலீட்டாளர் மாநாடு சிறப்பாக நடைபெறுகிறது. இதுவரை சென்னையை சுற்றிமட்டுமே இருந்துவந்த வளர்ச்சி, தற்போது சென்னை மட்டுமின்றி தென்தமிழகத்திற்கும் கிடைக்கப்போகிறது. இனி சென்னை மட்டுமே வளர்ச்சிபெறுகிறது என யாரும் சொல்ல மாட்டார்கள். தென் தமிழகத்திலும் அதிக முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. பரந்தூர் தவிர மேலும் சில விமானநிலையங்கள் அமைக்கப்படும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com