முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமிweb

ஸ்டாலின் vs பழனிசாமி| அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு.. ஓபன் சேலஞ்சா..?? EPS பதிலடி!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுகவினரிடையே வார்த்தைப் போர், அறிக்கை போர் என காரசாரமான சூழல் உருவாகியுள்ளது.
Published on
Summary

முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது. ஸ்டாலின் திமுக அரசின் சாதனைகளை பெருமைப்படுத்தி அதிமுக ஆட்சியை விமர்சித்தார். இதற்கு பதிலளித்த பழனிசாமி, திமுக ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி, நேருக்கு நேர் விவாதத்திற்கு சவால் விடுத்துள்ளார். இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக இடையே காரசாரமான கருத்து மற்றும் அறிக்கை போர் இருந்துவருகிறது.

கள்ளக்குறிச்சியில் நடந்த சமீபத்திய நிகழ்ச்சி மேடையில் அதிமுக அரசை விமர்சித்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின், திமுக அரசின் சாதனைகளை சொல்ல சொல்ல மூச்சு வாங்குகிறது. இப்படி பெரிய சாதனைகளை கூட திராவிட மாடல் அரசு செய்துள்ளது, எங்களுக்கு எதிரானவர்கள் கூட இதை இல்லை என்று சொல்லமுடியாது. நான் கேட்கிறேன் இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா? இது என்னுடைய ஓபன் சேலஞ்ச் தைரியமிருந்தா சொல்லுங்க? 5% உங்களால சொல்லமுடியுமா? 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சிகாலத்தில் பாழாய் போன தமிழ்நாடு, திமுக ஆட்சியில் தான் துள்ளிக்குதித்து எழுந்துள்ளது” என விமர்சித்து பேசியிருந்தார்.

இந்தசூழலில் தான் முக ஸ்டாலின் ஓபன் சேலஞ்ச் விடுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதற்கு பதிலளித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என பதிலடி கொடுத்துள்ளார்.

முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
”இல்லாத சரஸ்வதி நதி நாகரிகம்.. 2000 ஆண்டுகால சண்டையில் தோற்க மாட்டோம்” - முக ஸ்டாலின் விமர்சனம்

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா??

முக ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த பொம்மை முதல்வரே... நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?

நீங்கள் நின்றுப் பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அஇஅதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று!

அஇஅதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா? அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிpt web
முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
’12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை..’ தோல்வியடைந்த திமுக அரசு என EPS விமர்சனம்!

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு, Collar-ஐ தூக்கிப் விட்டு பேசுகிறீர்களே... உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?

20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா? எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்தது? தேர்தல் பயத்தில், நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா?

செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே AI சந்தாவை 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது உங்கள் விடியா அரசு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும். திரு. முக ஸ்டாலின் அவர்களே- நீங்கள் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோ ஷூட்களின் பட்டியல்.

முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
மேகதாது அணை விவகாரம்| 30 பேர் கொண்ட குழுவை அமைத்த கர்நாடகா.. EPS விமர்சனம்!

இதேபோல், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா? (கவலை வேண்டாம். மூச்சு இரைக்க வாய்ப்பே இல்லை!) அப்புறம்... ஏதோ Open challenge என்று சொன்னீர்களே... பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது...

என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? அஇஅதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?” என பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
’திமுக ஆட்சியில் காவல் துறை கம்பீரத்தை இழந்துள்ளது..’ எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com