“ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது” – எடப்பாடி பழனிசாமி

மக்கள் கஷ்டப்படும்போது உதவாதவர் முதல்வர் ஸ்டாலின். அவரை நம்பி பொதுமக்கள் வாக்களித்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
EPS
EPSpt desk

செய்தியாளர்: ராஜாராம்

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறை சின்னகடை வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...

அதிமுக பொதுக்கூட்டம்
அதிமுக பொதுக்கூட்டம்pt desk

“இப்போதும் நான் விவசாயம் செய்து வருகிறேன். எனவே, விவசாயிகள் கஷ்டங்கள் என்ன என்பது எனக்கு புரியும். செல்வச் செழிப்பில் வாழ்ந்த மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகளின் கஷ்டங்கள் புரியாது. மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக வாழாமல் தன் வீட்டு மக்களுக்காக வாழ்கிறார். மக்களின் மீது அக்கறை இல்லாத பொம்மை முதலமைச்சராக செயல்படுகிறார். இவரை நம்பி வாக்களித்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது.

EPS
“அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக முடக்கிவிட்டது” – எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை கூட்டத்தில் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என்று ஸ்டாலின் பேசினார். எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது காங்கிரஸ். I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் கூறியதும் I.N.D.I.A கூட்டணியில் இருந்தவர்கள் பலர் பிரிந்து செல்கின்றனர். கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எதிர் எதிர் துருவங்களாக போட்டியிடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கம்யூ. கட்சி கூட்டணியில் இருக்கிறது.

இவர்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது? திமுக அரசின் ஊழல் குறித்து கவர்னரிடம் புகார் அளித்தோம். ஆனால் அவர் விசாரிக்கவில்லை. அப்படி விசாரித்திருந்தால் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் வந்திருக்கும்.

modi
moditwitter

பாஜகவிற்கு எடப்பாடி பயப்படுகிறார் என்று முதல்வர் கூறுகிறார். அதிமுக காரர்கள் யாருக்கும் பயப்படுபவர்கள் இல்லை. எம்ஜிஆர் பயிற்சி பட்டறையில் படித்த மாணவர்கள் அதிமுகவினர். தமிழக மக்களுக்கு பிரச்னை வந்தால் அதனை உடைக்க பாடுபடுவோம். கூட்டணியில் இருந்தவரை கூட்டணி தர்மத்தை கடைபிடித்தோம். உங்களை போல் கூட்டணியில் இருந்துகொண்டு நாங்கள் உள்ளடி வேலை பார்ப்பது இல்லை.

கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை கொடுத்து இணைந்து பணியாற்றுவோம். அதிமுக கூட்டணி தர்மணத்தை கடைபிடிக்கக் கூடிய கட்சி. உங்கள் கூட்டணியில் இருக்கிறவர்கள் எப்படி மன்றாடி சீட் வாங்கினார்கள் என்பது எனக்கும் தெரியும்” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com