ED Raid
ED Raidpt desk

திண்டுக்கல்: தொழிலதிபர் ரத்தினம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை!

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் என்பவரின் தரணி குழுமம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
Published on

செய்தியாளர்: காளிராஜன் த

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம். இவரது வீடு மற்றும் அலுவலகம் திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ளது இவர் தரணி குழுமம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் வீடு கட்டுமானம், ரியல் எஸ்டேட், செங்கல் டிரான்ஸ்போர்ட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்

ED Raid
ED Raidpt desk

இந்த நிலையில் மணல் குவாரியில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக கடந்த 12.9.2023 அன்று ரத்தினம் வீடு மற்றும் அலுவலகம், அதே போல ஹனிபா நகரில் உள்ள ரத்தினத்தின் மைத்துனர் கோவிந்தன் வீடு மற்றும் அலுவலகத்திலும் இரண்டு நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ED Raid
அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகிறது Fengal... புயலாகவே கரையை கடக்கும்...!

அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக 25.11.2023 அன்று ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து இன்று மூன்றாவது முறையாக ஜிடிஎன் சாலையில் உள்ள தரணி குழு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

ED Raid
ED Raidfile

இரண்டு கார்களில் வந்துள்ள 6 அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது முறையாக தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ED Raid
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com