\
ஊட்டி, கொடைக்கானல்
ஊட்டி, கொடைக்கானல்puthiya thalaimurai

மக்களே... ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா? அப்போ உங்களுக்குதான் இந்த நியூஸ்!

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ- பாஸ் நடைமுறை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Published on: 

கோடை விடுமுறையையொட்டி ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பை கவனத்தல் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

#BREAKING | ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ்: ஐகோர்ட்
#BREAKING | ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ்: ஐகோர்ட்

உயர்நீதிமன்றத்தில் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது குறைக்கப்படுவதுடன், சுற்றுலா வருவோரும் மன நிம்மதியுடன் தங்களது விடுமுறையை கழிக்க முடியும் என சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஊட்டி, கொடைக்கானல்
மதுரை - கலப்பு திருமணம்; கணவர் கொலை - “கொலைகாரங்க எதிர்லயே இருக்காங்க; எனக்கு அரசும் ஏதும் செய்யல”

மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவு கிடைக்க பின்னர் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விரைவில் ‘இ-பாஸ் பெறுவதற்கான வழிகாட்டு நடைமுறைகள் வெளியிடப்படும்’ என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com