கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை: என்ன நடந்தது?

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் pt web

கோவை சரக டிஐஜி விஜயகுமார் கோவை பந்தய சாலை பகுதியிலுள்ள முகாம் அலுவலகத்தில், இன்று காலை தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை 6.45 மணியளவில் நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்துக்கு வந்துள்ளார் விஜயகுமார். அங்கு தனது பாதுகாவலரிடம் துப்பாக்கியை 6.50 மணியளவில் வாங்கி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என சொல்லப்படுகிறது.

மன அழுத்தத்தால் கடந்த சில வாரங்களாக தான் முறையாக தூங்கவில்லை என சக பணியாளர்களிடம் அவரேவும் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மன அழுத்தத்தை குறைக்க விஜயகுமார் மாத்திரைகளையும் சாப்பிட்டு வந்துள்ளார். டி.ஐ.ஜி. விஜயகுமார் மனைவி மற்றும் மகள் சென்னையில் வசித்து வந்த நிலையில் கோவையில் விஜயகுமார் தனியாகத்தான் வசித்து வந்துள்ளார். மன அழுத்தம் ஏற்பட்டதால் விடுப்பிலும் இருந்துள்ளார். மேற்கொண்டு விடுப்பு எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து மேலதிகாரிகள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர்.

கோவை சரக டிஐஜி விஜயகுமார்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் pt web

விஜயகுமாரின் உடலானது இன்று மதியம் 12 மணிக்குள் பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊரான தேனி அரண்மனை புதூருக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடலூர், நாகை, காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜியாக பொறுப்பேற்றார்.

#JUSTIN | டிஐஜி தற்கொலை - முதல்வர் இரங்கல்
#JUSTIN | டிஐஜி தற்கொலை - முதல்வர் இரங்கல்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் மறைவுக்கு, குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், “கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

டிஜிபி சங்கர் ஜிவால், விஜயகுமார் மறைவுக்கு பணிச்சுமை காரணமில்லை என தெரிவித்துள்ளார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com