MK Stalin
MK Stalin PT web

சென்னை வந்த முரசொலி செல்வம் உடல்.. கதறி அழுத முதல்வர்.. அஞ்சலி செலுத்திய விஜய் மனைவி!

வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த ’முரசொலி’ செல்வம் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
Published on

எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனுமான ’முரசொலி’ செல்வம் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்.10) பெங்களூருவில் உயிரிழந்தார். இதையடுத்து சென்னை கோபாலபுரம் கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

முன்னதாக, கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த ’முரசொலி’ செல்வம் உடலைக் கண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதறி அழுதார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ’முரசொலி’ செல்வம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து ’முரசொலி’ செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் விஜயின் மகளும், செல்வியின் மகள் மகளும் ஒன்றாக படித்துள்ளனர் இருவரும் நண்பர்கள்,அதன் மூலம் குடும்ப நண்பர்களாக மாறியுள்ளனர்.

அதுபோல் கவிஞர் வைரமுத்து, நடிகர் ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் , மற்றும் அவரது மனைவி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், நடிகர் பிரசாந்த், சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிக்க; காற்றில் கலந்த உயிர் | ”ஒரு போரால் எங்கள் காதல் முறிந்தது”.. வைரலாகும் ரத்தன் டாடாவின் காதல் கதை!

MK Stalin
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மருமகன் ‘முரசொலி’ செல்வம் காலமானார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com