“10 வருசமா சர்வீஸ்ல இருக்கேன்.. ஒண்ணும் பண்ண முடியாது” - பொதிகை ரயிலில் போதையில் ரகளை செய்த போலீஸ்!

“எவனாலயும் ஒண்ணும் பண்ணமுடியாது.. எங்க வேணா போயுக்கோ” என்று மது போதையில் ரயிலில் தகராறு செய்த போலீஸ் அதிகாரியின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அவருக்கு மருத்துவ பரிசோதனையில் குடிபோதை சான்று வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
சுப்பையா பாண்டியன்
சுப்பையா பாண்டியன்பொதிகை ரயில்

தென்காசி ஊத்துமலை பகுதியைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவர் சென்னை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த பொதிகை ரயிலில் பயணித்துள்ளார் சுப்பையா பாண்டியன். அப்போது, உடன் வந்த நண்பருடன் இருக்கை மாற்றித்தருமாறு மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மதுரை ரயில் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் மது போதையில் தகராறு செய்த சுப்பையா பாண்டியனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் மது போதை சான்றிதழ் பெற்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுப்பையா பாண்டியன்
வாணியம்பாடி: அதிகாலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்.. 4 ஆண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

“என்னையெல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது”

ரயிலில் விசாரிக்க வந்த காவல்துறையிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்ட வீடியோயும் தற்போது வைரலாகி வருகிறது.  “ஏனப்பா இப்டி பண்ணுற.. நீங்களே இப்படி பண்ணலாமா” என்று ஒருவர் கேட்டபோது,  “நான் சத்தமா பேசவே இல்லையே” என்று கத்தினார் சுப்பையா பாண்டியன். நடந்த சம்பவங்களை காவலர் ஒருவர் வீடியாவாக பதிவு செய்த நிலையில், அவரைப் பார்த்து பேசிய சுப்பையா பாண்டியன், “ஏட்டையா நீங்க வீடியோ எடுக்குறதெல்லாம் வேஸ்ட் ஏட்டையா.. நானெல்லாம் 10 வருசமா சர்வீஸ்ல இருக்கேன். என்னையெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது” என்று நக்கலாக பேசினார்.

எந்த அதிகாரிக்கிட்ட போனாலும் ஒண்ணும் பண்ணப்போறதில்ல” என்றவர்,   “போலீஸா அடத்தூ..” என்று துப்பிவிட்டு “என் கண் முன்னாலே போலீஸா என்று பார்த்து ஒருவன் ‘தூ’ என்று துப்பினான். அத பார்த்து என் கண்ணுல தண்ணியே வந்துடுச்சு” என்று நாடகமாடினார். 

தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் அத்துமீறி பேசி வந்த சுப்பையா, உயர் அதிகாரி வந்தவுடன், ‘சார் சார்’ என்று பணிவுப்பக்கம் திரும்பினார். இப்படியாக பேச்சு வார்த்தை நடந்தபோது, வீடியோ எடுத்த காவலர் மீது ஆத்திரமடைந்தவர், கண்டபடி ஆபாச வார்த்தைகளால் வசைபாட ஆரம்பித்தார். இவை அனைத்தும் வீடியோவில் பதிவான நிலையில், சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், ‘ஒரு போலீஸ் அதிகாரியே இப்படி பண்ணலாமா’ என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சுப்பையா பாண்டியன்
தீபாவளியை முன்னிட்டு சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே.. 14ம் தேதி வரை முன்பதிவில்லா ரயில் சேவை!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com