தலைக்கு ஏறிய மதுபோதை.. பேருந்துக்கு முன்பு படுத்து தூங்கிய நபர்..!

பேருந்து நிலையத்தில் பேருந்து முன்பு அசால்ட்டாக படுத்து உறங்கிய போதை ஆசாமியின் வீடியோ வைரலாகியுள்ளது.
bus stand
bus standfile image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினம்தோறும் பல்வேறு மாவட்டத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் போதை ஆசாமி ஒருவர் தான் வைத்திருந்த பையை தலையணையாக வைத்து தனியார் பேருந்து முன்பு படுத்து உறங்கி உள்ளார். அங்கிருந்த ஓட்டுனர்கள், பொதுமக்கள் அவரை கடந்து சென்ற போதும் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர்.

யாருமே எழுப்பாததால் போதை ஆசாமி அங்கேயே நீண்ட நேரமாக தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவ்வழியாக வந்த காவல் உதவி ஆய்வாளர், தனியார் பேருந்து முன்பு படுத்து உறங்கிக் கொண்டிருந்த போதை ஆசாமியை எழுப்பினார். அதற்கு, ஒன்றுமே தெரியாதபடி நன்றி தெரிவித்த போதை ஆசாமி, அங்கிருந்து புறப்பட்டு வேறு இடத்தில் படுத்து உறங்கி உள்ளார்.

காவலர் விசாரித்த போது அவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பதும் தற்போது சமையல் வேலைக்கு வந்துவிட்டு ஊர் திரும்பிய போது தலைக்கு ஏறிய மது போதையால் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கியது தெரியவந்துள்ளது.

bus stand
தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டு சிங்கப்பெண்.. அடுத்த இலக்கு ஒலிம்பிக்!!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com