'ஓ போலீஸ் பேரிகார்டா? எடைக்கு போட்டு காசு பார்ப்போம்'- போலீஸை அதிரவைத்த போதை ஆசாமி!

போக்குவரத்து வசதிக்காக போலீஸாரால் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை போதை ஆசாமி ஒருவர் எடைக்கு போட கொண்டு போன சம்பவம் நீலகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரிகார்டை தூக்கிய நபர்
பேரிகார்டை தூக்கிய நபர்புதிய தலைமுறை

நீலகிரி மாவட்டம் உதகை மெயின் பஜார் பகுதியில், போக்குவரத்து வசதிக்காக போக்குவரத்துத்துறை சார்பில் ‘நோ பார்க்கிங்’ எச்சரிக்கை பதாகைகள் மற்றும் பேரிகார்டு போன்றவை பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை, போதை ஆசாமி ஒருவர் எடைக்கு போடுவதற்காக அசால்ட்டாக தூக்கிச்சென்றார்,

பேரிகார்டை தூக்கிக்கொண்டு மார்க்கெட் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போதை ஆசாமி குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸார், உடனடியாக அங்கு விரைந்து பேரிகார்டை மீட்டனர். மேலும், அந்த நபரை B1 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து வசதிக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை பட்டப்பகலில் எடைக்குப்போட முயன்ற போதை ஆசாமியின் இந்த செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேரிகார்டை தூக்கிய நபர்
“என் சொந்தக்காரர் கிட்டயே வரி வசூலிப்பியா”-நகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்த திமுக கவுன்சிலர்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com