\
சென்னை: நாளை முதல் ஆர்டி-பிசிஆர் முடிவு வருவதற்கு முன்பே மருந்து தொகுப்பு வழங்கும் திட்டம்

சென்னை: நாளை முதல் ஆர்டி-பிசிஆர் முடிவு வருவதற்கு முன்பே மருந்து தொகுப்பு வழங்கும் திட்டம்

சென்னை: நாளை முதல் ஆர்டி-பிசிஆர் முடிவு வருவதற்கு முன்பே மருந்து தொகுப்பு வழங்கும் திட்டம்
Published on

சென்னை மாநகராட்சி மையங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொண்ட நபர்களுக்கு முடிவு வருவதற்கு முன்பே மருந்து மாத்திரைகளை வழங்கும் திட்டத்தை மாநகராட்சி நாளை தொடங்க உள்ளது.

இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி பரிசோதனை மையங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கு, பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னரே வைட்டமின் சி, ஜின்க், பாராசிட்டமால் ஆகிய மாத்திரைகள், கபசுரக் குடிநீர் மற்றும் மூன்றடுக்கு முகக்கவசங்கள் அடங்கிய மருந்து தொகுப்பு வழங்கப்படும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு மட்டும் அசித்ரோமைசின் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மருந்து தொகுப்பிலுள்ள மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com