Published : 15,Jan 2022 08:09 PM

நேற்றைவிட சற்று அதிகரிப்பு: தமிழகத்தில் மேலும் 23,989 பேருக்கு கொரோனா

In-Tamil-Nadu-23989-people-have-been-diagnosed-with-corona-virus-in-the-last-24-hours

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று தினசரி பாதிப்பு 23,459 ஆக பதிவாகி இருந்த நிலையில், இன்றைய தொற்று பாதிப்பு 23,989 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 10,988 பேர் குணமடைந்துள்ளனர்.

image

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 8,978 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,31,007 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிக்க: “ஒமைக்ரான் தீவிர பாதிப்பில்லையெனக்கூறி அலட்சியம் வேண்டாம்” - ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்