“ஊத சொன்னா என்ன கடிக்கிற?” போக்குவரத்து போலீஸாரை பாடாய் படுத்திய போதை ஆசாமி!

மது போதையில் ஆட்டோ ஓட்டிச்சென்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், போக்குவரத்து போலீஸிடம் ஊதுவதற்கு பதிலாக உறுஞ்சிய சம்பவம்.. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதை உறுதிபடுத்தி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீஸ்.
மதுபோதையில் அட்டூழியம்
மதுபோதையில் அட்டூழியம்புதியதலைமுறை

சென்னை வியாசர்பாடி கணேசபுரம் சப்வே அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிரகாஷ் என்பவர், இன்று மதிய நேரத்தில் சாப்பிடுவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது, ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுனர் அவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் பிரகாஷுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு வந்த வியாசர்பாடி போக்குவரத்து போலீசார், ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆட்டோவை ஓட்டி வந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பதும், அவர் மதுபோதையில் ஆட்டோவை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

மதுபோதையில் அட்டூழியம்
"உங்களை வைத்து இயக்கும் நாள் வரும் என நினைக்கவில்லை" - தன்னை செதுக்கிய குருவுக்கே டீச்சர் ஆன தனுஷ்!

மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனரிடம், அவர் மது அருந்தியது உண்மைதானா என்று சோதிக்க கருவி வைத்து சோதனை செய்துள்ளார் போலீஸ் அதிகாரி. ஆனால், மதுபோதையில் இருந்த ராஜனோ, ஊதுவதற்கு பதிலாக, சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக பைப்பை உறிஞ்சேபடியும், கடித்தபடியும் போக்கு காட்டியுள்ளார்.

ஒழுங்காக ஊதினால் ஆட்டோ சாவியை கொடுத்துவிடுகிறேன் என்று போலீஸ் அதிகாரி சொல்ல, “என்னால் இவ்வளவுதான் ஊத முடியும்” என்று கூறியுள்ளார் ஆட்டோ ஓட்டுனர். ஒரு கட்டத்தில், போக்குவரத்து போலீஸாரின் கண்ணத்தை பிடித்து “நான் என்ன உங்கள மாதிரியா கட்டிங் பண்ணியிருக்கேன்” என்று கூறினார்.

தொடர்ந்து, சோதனையில் அவர் மது அருந்தியது உண்மைதான் என்று தெரியவர, பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீஸார் அவரது ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். போக்குவரத்து காவலர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநரின் செயல், அப்பகுதியினரிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மதுபோதையில் அட்டூழியம்
“என்னங்க.. ஒரே கெட்டுப்போன ஸ்மெல் வருது” “அட அதுவா நேத்து செஞ்ச சிக்கனுங்க”-பெரம்பலூரில் அதிர்ச்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com