திராவிட முன்னேற்றக் கழகம்
திராவிட முன்னேற்றக் கழகம்Pt web

14 சட்டமன்ற தேர்தல்களில் திமுகவின் செயல்பாடு என்ன?.. இடங்களும், வாக்கு சதவீதமும்!

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு இடங்களை வென்றுவந்துள்ளன, எவ்வளவு சதவீத வாக்குகளை பெற்றுவந்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.
Published on

1962இல் நடந்த தேர்தலில்தான் முதன்முதலாக அங்கீகாரத்துடன் உதய சூரியன் சின்னத்தில் திமுக போட்டியிட்டது. அத்தேர்தலில் திமுக 27.1% வாக்குகளை பெற்று 50 இடங்களில் வென்றது. 1967இல் 40.69% வாக்குகளை பெற்று 137 இடங்களில் வென்றதுடன் ஆட்சியையும் முதன்முதலாக பிடித்தது. 1971இல் 48.58% வாக்குகள் பெற்ற நிலையில் 184 இடங்களில் வெற்றி கிடைத்தது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்ற அதிக தொகுதிகள், அதிக வாக்கு சதவீதம் இந்த தேர்தலில்தான்.

எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி
எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதிx

1977இல் 24.89% வாக்குகளும் 48 இடங்களும் கிடைத்தன. இம்முறை திமுக ஆட்சியை அதிமுகவிடம் இழந்தது. 1980இல் 22.1% வாக்குகளுடன் 37 இடங்களில் திமுக வென்றது. 1984இல் 29.34% வாக்குகள் பெற்ற திமுக 24 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதிமுக இரண்டாக பிளந்திருந்த நிலையில் 1989இல் தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக 33.18% வாக்குகளுடன் 150 இடங்களில் வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரியணையும் ஏறியது.

திராவிட முன்னேற்றக் கழகம்
"விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் தான் போட்டியே” - வேலூரில் விஜய் பேச்சு!

1991இல் ராஜிவ் படுகொலைக்கு பின் நடந்த தேர்தலில் திமுக 22.46% வாக்குகளை பெற்று 2 இடங்களில் மட்டுமே வென்றது. சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் மோசமான செயல்பாடு இதுவே. 1996இல் 173 இடங்களில் அமோக வெற்றிபெற்ற திமுக 42.07% வாக்குகளை கைப்பற்றி ஆட்சியமைத்தது. 2001இல் 31 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்த திமுக 30.92% வாக்குகளை ஈட்டியிருந்தது. 2006இல் 26.46% வாக்குகளுடன் திமுக 96 இடங்களில் மட்டுமே வென்றிருந்தாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின்
கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின்Pt web

2011இல் 23 இடங்களில் வென்ற திமுக, ஆட்சியை பறிகொடுத்தது. இம்முறை அதற்கு 22.39% வாக்குகள் கிடைத்தன. 2016இல் 31.64% வாக்குகளுடன் 89 இடங்களில் வென்ற திமுக தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே நீடித்தது. மு.கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய ஆளுமைகள் மறைவுக்கு பின் 2021இல் தேர்தல் நடைபெற்றது. இம்முறை133 இடங்களில் வென்று 37.7% வாக்குகளுடன் திமுக10 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஆட்சியமைத்தது.

திராவிட முன்னேற்றக் கழகம்
கொள்கை மாறி கூட்டணி வைக்கும் கட்சிகள்.. முன்னுதாரணமான 1967 தேர்தல்.. நடந்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com