தீவிரவாத தாக்குதலை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - நடிகர் எஸ்வி.சேகர் வேண்டுகோள்
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை மாங்காடு அடுத்த கோவூரில் தனியார் எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை துவங்கப்பட்டது இதனை அமைச்சர்கள் சிவசங்கர், தாமோ.அன்பரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகர் எஸ்வி.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து எஸ்வி.சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...
காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாதி தாக்குதலுக்கு எந்த ஒரு மதத்தையும் குறை சொல்லக்கூடாது, தீவிரவாதம் நடந்தால் தீவிரவாதம் என கூற வேண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் பயங்கரவாதிகள் எனக் கூற வேண்டும். மனித நேயத்தின் உச்சகட்டமாக உதவி செய்த உள்ளூர் இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்
உயிரிழந்தவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம். குறிப்பிட்ட ஒரு சில மதத்தை வைத்து அவர்கள் தான் செய்தார்கள் என்று கூறுவது தவறு. தமிழகத்தில் என்ன செய்தாலும் பாஜக ஜெயிப்பது என்பது நடக்காத விஷயம், பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று எஸ்வி.சேகர் தெரிவித்தார்.