india, pakistan
india, pakistanx page

மருத்துவ விசாக்கள் ரத்து.. 29-ம் தேதி கடைசி நாள்! பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு!

பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானியர்களுக்கான அனைத்து வகை விசா சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Published on

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசாக்கள், வரும் 27ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கான
மருத்துவ விசாக்கள் 29 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு..

இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும், விசா காலம் முடிவடைவதற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமென கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியர்கள் யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என
அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரும், விரைவில் நாடு திரும்ப வேண்டுமென கூறியுள்ளது. ஏற்கனவே, SVES விசாக்கள் மூலம் இந்தியா வந்துள்ள பாகிஸ்தானியர்கள், 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com