"வானளாவிய அதிகாரமா? இறுமாப்புடன் இருந்த ஆளுநரின் உச்சந்தலையிலேயே கொட்டிய உச்சநீதிமன்றம்"-திருமாவளவன்

வானளாவிய அதிகாரங்கள் இருப்பதாக இறுமாப்புடன் இருந்த ஆளுநரின் உச்சந்தலையிலேயே உச்சநீதிமன்றம் கொட்டு வைத்திருக்கிறது என தொல்.திருமாவளவன் பேட்டியளித்தார்.
தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்புதிய தலைமுறை

அயோத்திதாசர் மணிமண்டபம் என்ற நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியதற்கு முதல்வருக்கு நன்றி. டிசம்பர் 23 ஆம் தேதி திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெறுகின்றது. இதில், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள். முதல்வர் ஸ்டாலின் மற்றும் தேசிய அளவிலான தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்முகநூல்

5 மாநில தேர்தல் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வந்திருப்பது ஆறுதல் அளிக்கின்றது. கர்நாடக மாநிலத்தில் பாடம் புகட்டியதை போல் 5 மாநிலத்திலும் தோல்வியை கொடுப்பார்கள் என நாடே எதிர்பார்க்கின்றது. காங்கிரஸ் கட்சிக்கான செல்வாக்கு கூடி இருக்கின்றது. பா.ஜ.க-வை அகற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தியா கூட்டணி இருக்கின்றது.

தமிழக ஆளுநர் உள் நோக்கத்துடன் தமிழக அரசுக்கும், திமுகவிற்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில. செயல்படுகின்றார். பல்கலைக் கழக மசோதாக்கள் திருப்பி அனுப்பியது அரசமைப்பு சட்ட விரோதத்தை காட்டுகின்றது மாநில அரசை வழிநடத்தும் முதல்வர் பல்கலைக் கழகங்களுக்கு வேந்தராக இருக்கலாம் என்பதை ஆளுநரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை தனியார் பல்கலைக் கழக வேந்தர்களாக உரிமையாளர் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றார். முதல்வர் வேந்தராக இருப்பது ஆளுநரால் ஏற்க இயலவில்லை.

RN.Ravi  tn govt
RN.Ravi tn govtpt desk

ஆளுநரின் போக்கை சுட்டிகாட்டி நீதிமன்றம் கண்டித்து இருக்கின்றது. உச்ச நீதிமனலறம் கொட்டு வைப்பதற்கு முன்பு ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஏற்கனவே சொல்லி இருந்தோம். ஆளுநர் தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்த நிலையில், தலையில் உச்ச நீதிமன்றம் கொட்டு வைத்திருக்கின்றது. தீர்ப்பை மதிப்பார் என நினைக்கின்றோம். மசோமக்களுக்கு ஒப்புதல் அளிப்பார் என நினைக்கிறேன்.

ஈரோடு இந்திரா நகரில் தலித் இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். இந்தியாவின் தலைமை நீதிபதி ஆளுநருக்கு வழிகாட்டுதல் இருப்பது சிறந்தது. இது அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும். இந்தியா கூட்டணிக்கு சாதகமாக 5 மாநில தேர்தல் முடிவு வரும். பிரதமர் யார் என்ற விவாதம் இப்போது இந்தியா கூட்டணியில் நடக்கவில்லை. பிரதமர் வேட்பாளர் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் கூடி முடிவு செய்வோம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com