குழந்தையுடன் மருத்துவர்கள்
குழந்தையுடன் மருத்துவர்கள் PT WEB

700 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை; கை விரிக்காமல் கடவுளாக மாறிய மருத்துவர்கள்-நெகிழ்ச்சி சம்பவம்!

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை ஒரு வருடமாகக் கண்காணித்து எந்த குறைபாடும் இல்லாமல் மருத்துவர்கள் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த  புதுராஜா - மினிப்ரியா  தம்பதிக்குக் குறைப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 700 கிராம் எடை மட்டுமே இருந்துள்ளது.

இந்தக் குழந்தையை உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர்களான  ராதாமணி, செந்தில்நேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 66 நாட்கள் தீவிரமாகக் கண்காணித்து 1400 கிராம் எடையுடன்  நல்ல ஆரோக்கியத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்
அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்

மேலும் குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு குறைபாடுகளைச் சரிசெய்யும் பொருட்டு, இந்த குழந்தையைத் தொடர்ந்து ஒரு வருடங்களாக மூளை வளர்ச்சி, கண் பார்வை, கை, கால்கள் வளர்ச்சி, வளர்ச்சிக்கு ஏற்ற உடல் எடை ஆகியவற்றைக் கண்காணித்துத் தொடர்ந்து சிகிச்சை அளித்து  வந்துள்ளனர்.

குழந்தையுடன் மருத்துவர்கள்
ஒடிசா: கிரிக்கெட் விளையாடிய எம்.எல்.ஏ... தடுமாறி விழுந்ததில் நேர்ந்த சோகம்!

இந்தநிலையில் இன்று சுமார் 6 கிலோ 500 கிராம் எடையுடன் நல்ல ஆரோக்கியமான குழந்தையாக மாற்றி சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையையும், குழந்தையின் பிறந்தநாளையும் கொண்டாடும் வகையில் இன்று மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குழந்தைக்குப்  பிறந்தநாள் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையுடன் மருத்துவர்கள்
ஒசூர்: மார்கழியில் மக்களிசை – மேடையிலேயே நடனமாடிய இயக்குனர் பா.ரஞ்சித்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com