odisha mla
odisha mlatwitter

ஒடிசா: கிரிக்கெட் விளையாடிய எம்.எல்.ஏ... தடுமாறி விழுந்ததில் நேர்ந்த சோகம்!

ஒடிசாவில் கிரிக்கெட் போட்டியைத் தொடங்கிவைத்தபோது எம்.எல்.ஏ. ஒருவர், தடுமாறி விழுந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Published on

ஒடிசா மாநிலம் காலஹண்டி மாவட்டம் நார்லா தொகுதியின் பிஜு எம்எல்ஏவாக இருப்பவர் பூபேந்தர் சிங். ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவருடைய தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பூபேந்தர் சிங், கிரிக்கெட் தொடரை தொடங்கிவைத்தார். அப்போது மைதானத்தில் மட்டை பிடித்து சிறிதுநேரம் விளையாடினார்.

அப்போது பந்தை அவர் எதிர்கொண்டு விளையாடியபோது எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்தார். இதில், பூபேந்திர சிங் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து பூபேந்திர சிங்கை மீட்ட உதவியாளர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com