அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்

விருதுநகர் அருகே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உருவ பொம்மையை எரித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தேவையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தம் மீது தெரிவிப்பதாக கூறினார். மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மிகப் பெரிய ஊழல். தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு பெரியது. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவில் கொள்ளையடித்த கட்சி தி.மு.க” எனத் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி ஆ.ராசா, “ஊழல் குற்றச்சாட்டில் திமுகவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் 2 ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றால் நாளையோ, நாளை மறுநாளோ கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில், 2ஜி, சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்க நான் தயார். அவர் தயாரா? ” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “முதல்வரை ஏன் கூப்பிடுகிறாய்? எங்கு வரவேண்டும். நான் வருகிறேன். ராசாவுடன் ஆனாலும் சரி, ஸ்டாலினுடன் ஆனாலும் சரி. ஊழல் செய்தாயா இல்லையா? சர்க்காரியா கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட கட்சி தானே திமுக.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியை கண்டித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அவரின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவலறிந்து வந்த போலீசார் தீயை அணைத்து அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உருவ பொம்மையை எரிக்க முயன்ற திமுகவினரை தடுக்க முற்பட்டபோது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com