DMK Releases Candidate List; 3 Ministers Left Out of 2026 Race
3 அமைச்சர்களுக்கு சீட் இல்லைPt web

திமுக வேட்பாளர் பட்டியல்.. 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் 164 ஆளும் திமுக போட்டியிடவுள்ள நிலையில், அனைத்துத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், திமுக அமைச்சர்களாக உள்ள 3 பேருக்கு இம்முறை வாய்ப்பளிக்கவில்லை.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆளும் திமுக தேர்தலை சந்திக்கவிருக்கிறது. 1 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த தொகுதிப்பங்கீடு நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஒரு வழியாக முடிந்திருக்கும் நிலையில், 70 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியிருக்கிறது. அதன்படி 164 இடங்களில் நேரடியாக திமுக களம் காண்கிறது. அதேசமயம், 11 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. அந்தவகையில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காணவிருக்கிறது.

முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்web

இந்த சூழலில் தான், திமுக பொருளாளர் டி.ஆர் பாலு இன்று கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்தார். தொடர்ந்து, சிறிது நேரத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். இந்த சூழலில் தான், அப்பட்டியலில் தற்போது அமைச்சர்களாக உள்ள 3 பேருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை எனத் தெரியவந்திருக்கிறது.

DMK Releases Candidate List; 3 Ministers Left Out of 2026 Race
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. முக்கிய அமைச்சர்கள் எங்கெங்கு போட்டி?

அதன்படி, பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. தொடர்ந்து, தாராபுரம் தொகுதி கயல்விழி செல்வராஜுக்கும், ராணிப்பேட்டை தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான ஆர்.காந்திக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேசமயம், அமைச்சர் காந்திக்கு பதிலாக அவரது மகன் வினோத் காந்திக்கு ராணிப்பேட்டை தொகுதி அளிக்கப்பட்டிருக்கிறது

DMK Releases Candidate List; 3 Ministers Left Out of 2026 Race
போடிநாயக்கனூர் |முதன்முறையாக திமுக சார்பில் களமிறங்கும் ஓபிஎஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com