OPS to contest from the Bodinayakanur constituency on a DMK
ops, stalinx page

போடிநாயக்கனூர் |முதன்முறையாக திமுக சார்பில் களமிறங்கும் ஓபிஎஸ்!

தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் பெரியகுளம் தொகுதி தனி தொகுதியாக்கப்பட்டதும், ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூருக்கு இடம்பெயர்ந்தார்.
Published on

ஒ.பன்னீர்செல்வம், தனது 50 ஆண்டுகால அதிமுக அரசியல் வாழ்விற்குப்பின், தற்போது முதல்முறையாக திமுக சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவிற்குப்பின் அதிமுக, ஜெயலலிதா ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. இதில் 1989ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு, ஜெயலலிதா வெற்றி பெற்று அரசியலில் ஏறுமுகம் பெற்றார். அதைத் தொடர்ந்து போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது. இதையடுத்து, ஜெயலலிதாவின் அபிமானம் பெற்ற ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் வெற்றி பெற்று, வருவாய்த்துறை பொதுப்பணித்துறை, நிதித்துறை என பல்வேறு துறைகளில் அமைச்சர், இரண்டு முறை தமிழக முதலமைச்சர் வரை உயர்பதவிக்கு சென்றார். தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் பெரியகுளம் தொகுதி தனி தொகுதியாக்கப்பட்டதும், ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூருக்கு இடம்பெயர்ந்தார்.

OPS to contest from the Bodinayakanur constituency on a DMK
ops, stalinx page

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்று முறையும் வெற்றி பெற்றார் ஓ பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னும் தமிழக முதலமைச்சர் என மூன்று முறை தமிழக முதல்வர், ஜெயலலிதா மறைவிற்குப் பின் துணை முதல்வர் என அதிமுகவில் உயரிய பதவிகளை வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். மொத்தத்தில் தனது 50 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் அதிமுக சார்பில் ஐந்து சட்டன்ற தேர்தல்களை கண்ட ஓ பன்னீர்செல்வம் தோல்வியே காணாமல் வெற்றிபெற்று, 25 ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே, ஒ.பன்னீர்செல்வம், தனது 50 ஆண்டுகால அதிமுக அரசியல் வாழ்விற்குப்பின், தற்போது முதல்முறையாக திமுக சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில், ஏற்கெனவே மூன்று முறை வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவது இது நான்காவது முறை ஆகும்.

OPS to contest from the Bodinayakanur constituency on a DMK
திமுக வேட்பாளர் தேர்வு | ஓபிஎஸ்-ஐ இன்று நேர்காணல் செய்யும் முதல்வர் ஸ்டாலின்.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com