பிரியாணி கடையை மறைத்து முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர்.. தட்டிக்கேட்ட ஊழியர் மீது தாக்குதல்!

பல்லாவரம் பகுதியில் பிரியாணி கடையை மறைத்து முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்த திமுக நிர்வாகிகள்.... தட்டிக்கேட்ட்ட கடை ஊழியர் மீது தாக்குதல்.... வெளியான சிசிடிவி காட்சி.
கடையின் ஊழியரை தாக்கிய திமுக நிர்வாகி
கடையின் ஊழியரை தாக்கிய திமுக நிர்வாகிபுதியதலைமுறை

செய்தியாளர் - சாந்தகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பம்மல் நாகல்கேணி எம்ஜிஆர் சிலைக்கு எதிரே அன்வர் பாஷா என்பவர் ‘முகல் பிரியாணி’ என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.

அன்வர் பாஷாவின் முகல் பிரியாணி
அன்வர் பாஷாவின் முகல் பிரியாணி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகல்கேணி 12வது வட்ட திமுக செயலாளர் ஸ்ரீதர் என்பவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அப்பகுதி முழுக்க கடந்த மார்ச் 1-ம் தேதிக்கு முன்னர் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்துள்ளார்.

கடையின் ஊழியரை தாக்கிய திமுக நிர்வாகி
"யாரையும் கெஞ்சவில்லை, மிரட்டவும் இல்லை; கூட்டணியில் ஒரு பிரச்னையும்இல்லை"–கார்த்தி சிதம்பரம் எம்.பி

பேனர்களானது நடைபாதை முழுவதும் ஆக்கிரமித்திருந்துள்ளது. இதில் அன்வர் பாஷாவின் பிரியாணி கடையை மறைக்கும் வகையில் திமுகவினர் பேனர் வைத்துள்ளனர். இதனால், பேனர் வைக்கும்போது திமுக நிர்வாகிகளை கடையில் இருந்த ஊழியர்கள் தட்டிக்கேட்டுள்ளனர்.

பிரியாணி கடை ஊழியரை தாக்கும் திமுக நிர்வாகி
பிரியாணி கடை ஊழியரை தாக்கும் திமுக நிர்வாகி

இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பேனரை கட்டிக்கொண்டிருந்த திமுக நிர்வாகி ஒருவர், ஆவேசமாகி பிரியாணி கடையின் கல்லாவில் உட்கார்ந்திருந்த ஊழியரை ஓடிவந்து தாக்கியுள்ளார். தற்போது, இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதை கீழே காணலாம்...

மேலும், “பிறந்தநாள் முடிந்து 3 நாட்களாகியும் இன்னமும் பேனர் அகற்றப்படவில்லை. இதனால் கடையில் வியாபாரம் சரியாக போகவில்லை” என்று வேதனை தெரிவித்துள்ளார் பிரியாணி கடை ஊழியர். இந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடையின் ஊழியரை தாக்கிய திமுக நிர்வாகி
இன்று தொடங்குகிறது +1 பொதுத் தேர்வு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com