மக்களவையில் சிறந்த எம்.பி.க்களுக்கான விருதுமுகநூல்
தமிழ்நாடு
மக்களவையில் சிறந்த எம்.பி.க்களுக்கான விருது; பெற்றுக்கொண்ட சி.என். அண்ணாதுரை!
மக்களவையில் இந்தாண்டு சிறப்பாக செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அளிக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் சிறந்த எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் விருதை தமிழகத்திலிருந்து திருவண்ணாமலை தொகுதி உறுப்பினர் சி.என். அண்ணாதுரை பெற்றுள்ளார்.
மக்களவையில் இந்தாண்டு சிறப்பாக செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அளிக்கப்பட்டுள்ளன. அதில் திமுக எம்பி சி.என். அண்ணாதுரை தவிர தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவின் சுப்ரியா சுலே, பாஜகவின் நிஷிகாந்த் துபே, உத்தவ் சிவசேனாவின் அரவிந்த் சாவந்த், காங்கிரசின் வர்ஷா கெயிக்வாட் உள்ளிட்டோருக்கு சிறப்பான செயல்பாடுகளுக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவிலிருந்து அதிகபட்சமாக 7 பேர் விருது பெற்றனர். உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தானிலிருந்து தலா இருவரும் தமிழ்நாடு, ஒடிசா, கேரளா, அசாமிலிருந்து தலா ஒருவரும் விருது பெற்றனர்