\
DMK MLAs Ejected From Tamil Nadu Assembly Amid Uproar
சட்டப்பேரவைPt web

சட்டப்பேரவையில் அமளி.. திமுகவினரை வெளியேற்றிய அவைக்காவலர்கள்.. நடந்தது என்ன?

சபாநாயகர் இருக்கை முன்பு சூழ்ந்து அமளியில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை குண்டுக்கட்டாக அவைக்காவலர்கள் வெளியேற்றியதால் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

தமிழ்நாடு பட்ஜெட் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை அறிக்கைகளை சுட்டிக் காட்டி திமுகவை விமர்சித்ததுடன் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினின் மிசா கைது குறித்தும் விமர்சித்திருந்தார்.

சட்டப்பேரவை
சட்டப்பேரவைPt web

தொடர்ந்து, முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க திமுக அவகாசம் கேட்ட நிலையில், சபாநாயகர் நேரம் கொடுக்கவில்லை. தொடர்ந்து திமுகவினர் வெளிநடப்பு செய்திருந்ததனர். இந்தச்சூழலில் தான், இந்த சட்டசபைக் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கூட்டத்தின் தொடக்கத்தில் திமுகவின் கொறடா எ.வ.வேலு, சர்க்காரியா கமிஷன், அமலாக்கத்துறை வழக்கு மற்றும் மிசா குறித்து முதலமைச்சர் விஜய் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். எனவே, அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

ஆனால், சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கமுடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததையடுத்து, சபாநாயாகரின் இருக்கயை சூழ்ந்த திமுகவினர் முழக்கமிட்டனர். இதையடுத்து, அவர்களை தங்கள் இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வலியுறுத்தினார். எனினும், அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளியில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றும்படி அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, அவைக்காவலர்கள் திமுகவினரை குண்டுக்கட்டாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றியிருக்கின்றனர்.

DMK MLAs Ejected From Tamil Nadu Assembly Amid Uproar
தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பு.. இடைத்தேர்தல் எப்போது நடக்கும்? CM விஜயின் அடுத்த Move என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com