\
DMK MLA Markandeyan
DMK MLA Markandeyan PT

திமுக எம்எல்ஏவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.. பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு.!

முதல்வர் குறித்து அவதூறான வகையில் பேசிய திமுக எம்எல்ஏவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
Published on
Summary

முதல்வர் விஜய்யை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் உத்தரவிட்டது. விசாரணையில் நீதிபதி, சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவெளியில் பேசும் விதிமுறைகளை நினைவூட்டியதுடன், அவற்றை மீறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். மார்க்கண்டேயன் சிறை உணவு குறித்தும் புகார் தெரிவித்தார்.

முதல்வர் விஜய்யை அவதூறாக பேசிய வழக்கில் கைதான விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் போது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவெளியில் எப்படி பேசவேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளதாகவும், அதனை மீறி இப்படி பேசுவது சரியானது அல்ல என்று நீதிபதிசுமதி கருத்து தெரிவித்தார்.

DMK MLA Markandeyan Sent to Judicial Custody
மார்க்கண்டேயன்Pt web

விசாரணையின் போது மார்க்கண்டேயன் தனக்கு சர்க்கரைநோய் உள்ள நிலையில் முறையாக உணவு கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனையடுத்து அவரை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

DMK MLA Markandeyan
திருமணத்தை மீறிய உறவு விவகாரம்.. ரூ.5000 லஞ்சம் வாங்கிய SI பணியிடை நீக்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com