வேலூர் மேயர் சுஜாதா கார் பறிமுதல்
வேலூர் மேயர் சுஜாதா கார் பறிமுதல்pt

வேலூரில் மேயர் பயணம் செய்த கார் பறிமுதல்.. திமுக கவுன்சிலர் உட்பட 3 பேர் மீது வழக்கு!

வேலூரில் மேயர் பயணம் செய்த காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Published on
Summary

வேலூர் மேயர் சுஜாதா பயணம் செய்த கார் சோதனையில் சிக்கியதால், சத்துவாச்சாரி காவல்துறையினர் காரை பறிமுதல் செய்தனர். மேயர் காரை நிறுத்தாமல் சென்றதால், 27வது வார்டு திமுக உறுப்பினர் சதீஷ், கார் ஓட்டுனர் கோபிநாத், உரிமையாளர் சிவகுமார் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வேலூர் மாநகராட்சி திமுக மேயர் சுஜாதா நேற்று (20.03.2026) சத்துவாச்சாரி பகுதியில் அரசின் விளையாட்டு உபகரண பொருட்களை வழங்க சென்றதாக புகார் எழுந்த நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூர் மேயர் சுஜாதா
வேலூர் மேயர் சுஜாதா

அப்போது அவ்வழியாக வந்த மேயர் காரை சோதனையிட முயன்ற போது, அதில் இருந்தவர் நான் மேயர் என்று கூறியதோடு காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். இந்தசூழலில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் புகார் அளித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் இருந்த 27வது வார்டு திமுக உறுப்பினர் சதீஷ், கார் ஓட்டுனர் கோபிநாத், உரிமையாளர் சிவகுமார் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து புகாருக்குள்ளான மேயர் சென்ற காரை சத்துவாச்சாரி காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மேயர் சுஜாதா கார் பறிமுதல்
சென்னை| 2 நாட்களில் ரூ.57 லட்சம் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com