\
இரண்டரை வயது குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி கைது
இரண்டரை வயது குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி கைதுweb

கிருஷ்ணகிரி | 2 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி மரணம்.. திமுக நிர்வாகி கைது!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் கொடூரத்தின் உச்சமாக வெளியே வந்துள்ளது.
Published on
Summary

இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கவுண்டன் கொட்டாய் கிராமத்தில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணின் இரண்டரை வயது குழந்தை, கடந்த டிசம்பர் 11ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தது.

இதுதொடர்பாக குழந்தையின் தந்தை அளித்த புகாரில்போலீஸார் விசாரணைமேற்கொண்டனர். இதில், பிரேதப் பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியானது. இதனை தொடர்ந்து குழந்தையின் தாயுடன் பழகிவந்த கோம்பைக்காடு பகுதி திமுக இளைஞரணி கிளைச் செயலர் பெரியநாயகத்தை போலீஸார் கைது செய்தனர்.

இரண்டரை வயது குழந்தைக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டரை வயது குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி கைது
நந்தனம்| அரசு கல்லூரி கேண்டினில் பணிபுரியும் இளம்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com