திமுக வேட்பாளர்கள் பட்டியல்
திமுக வேட்பாளர்கள் பட்டியல்புதிய தலைமுறை

மக்களவை தேர்தல் 2024 | இன்று வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல்...!

மக்களவை தேர்தலில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.
Published on

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளதால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பிற இடங்களில் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்pt web

அதில் காங்கிரஸ் தவிர மற்ற கூட்டணிக்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

திமுக வேட்பாளர்கள் பட்டியல்
“இவர்களாக இருக்குமோ?” - மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்!

இந்த சூழலில், 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் விவரங்களை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட இருக்கிறார். அதைத்தொடர்ந்து முதல்வர் விரைவில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com