‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ - தமிழ்நாடு முழுவதும் திமுக MP-க்கள், அமைச்சர்கள் தீவிர பரப்புரை!

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ எனும் பெயரில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்pt web

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில் பெரும்பான்மையான கட்சிகள் கூட்டணியையும் தொகுதிப்பங்கீட்டினையும் இறுதி செய்து பிரச்சாரத்தில் இறங்கிவிட்டன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் குழுக்களையும் கட்சிகள் அறிவித்துள்ளன. அதன்படி திமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க, தேர்தல் ஒருங்கிணைப்புக்கென தனித்தனியாக குழுக்களை அமைத்துள்ளது.

எம்.பி.கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு
எம்.பி.கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு

திமுக எம்.பி.யும் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி தலைமையிலான நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, மாவட்ட வாரியாக மக்களைச் சந்தித்து அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துக்கள்’ எனும் தலைப்பில் பல்வேறு தரப்பினரது கருத்துக்களை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கேட்டு வருகிறது.

எம்.பி.கனிமொழி உரை
எம்.பி.கனிமொழி உரை
அதேபோல் தமிழகம் முழுவதும், ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ எனும் பெயரில் தலைமைக் கழகம் அறிவித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கான பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நேற்று, இன்று மற்றும் நாளை இவை நடைபெறுகின்றன.

அதில் வெள்ளிக்கிழமையான நேற்று (16.02.24) நாமக்கல் மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் பரப்புரைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய தமிழச்சி தங்கப்பாண்டியன், “தமிழகத்தின் உரிமைகளை தட்டி கேட்பதால்தான் இங்கு ஐ.டி, சி.பி.ஐ, இ.டி ரெய்டுகளை ஒன்றிய அரசு நடத்துகிறது, ஒன்றிய அரசின் பெயரில் திட்டங்களை வைத்து கொண்டு, அதற்கான முழு நிதியை தராமல், மாநில அரசின் நிதிகளை ஒன்றிய அரசு சுரண்டுகிறது” என தெரிவித்தார்.

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

ஈரோடு மாவட்டம் ஆனைக்கல்பாளையத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, “நம்மை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவைகளை மத்திய அரசு ஆயுதமாக எடுக்கிறது. ஜனநாயகத்திற்கு பேராபத்து வரும் போது திமுக முதல் குரல் கொடுக்கிறது.

வரும் காலத்தில் தேர்தல் முறை இருக்குமா இருக்காதா, வாக்குகளுக்கு மதிப்பு இருக்குமா இருக்காதா, அரசியலா சட்டம் பாதுகாப்பாக இருக்குமா இருக்காதா, பன்முகத்தன்மையும் மாநில உரிமையும் உயிர்ப்போடு இருக்குமா இருக்காதா என்பதை நிலைநாட்டும் தேர்தல்தான் 2024 நாடாளுமன்ற தேர்தல்” என தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறையில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், அமைச்சர் மெய்யநாதன், தலைமை கொறடா செழியன் எம்.பி. ராமலிங்கம், திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் சபாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் கீதா ஜீவன்
அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில், அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி காணாது பத்தாயிரம் வழங்க வேண்டுமென கூறும் பிஜேபி தலைவர் அண்ணாமலை மத்திய அரசு இதுவரை நிவாரண நிதி எதுவும் வழங்கவில்லை, அது குறித்து ஏன் கேள்வி கேட்கவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

இதேபோல் இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன.

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்
“மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய ஆட்சி மத்தியில் அமைய வேண்டும்” - எம்.பி. கனிமொழி பேச்சு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com