“மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய ஆட்சி மத்தியில் அமைய வேண்டும்” - எம்.பி. கனிமொழி பேச்சு

“தமிழகம் போன்ற மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய ஆட்சி இந்தியாவில் அமைய வேண்டும்” என்று எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
MP Kanimozhi
MP Kanimozhipt desk

நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல தரப்பட்டோரின் கருத்துகளை கேட்டு வருகின்றனர். கோவை திருப்பூரை தொடர்ந்து ஏழாவது மாவட்டமாக சேலத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கனிமொழி தலைமையிலான குழுவினர் கருத்துகளை கேட்டறிந்தனர்.

MP Kanimozhi
MP Kanimozhipt desk

அப்போது பேசிய கனிமொழி எம்.பி, “ஒன்றிய அரசு எந்த அளவுக்கு தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறது என அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும. ஜிஎஸ்டி-ல் உள்ள குழப்பங்களை காது கொடுத்து கேட்கக் கூட ஒன்றிய அரசு தயாராக இல்லை. தமிழகம் போன்ற மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய ஆட்சி மத்தியில் அமைய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

MP Kanimozhi
கனிமொழியின் மாஸ்டர் பிளான்... கைகொடுக்குமா தூத்துக்குடி?

இதனைத் தொடர்ந்து சேலம், நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com