“தமிழகத்தில் 39-க்கு 39 ஜெயிப்போம்.. அதிமுக உடனான கூட்டணி முறிந்ததில் வருத்தம் இல்லை” - அண்ணாமலை

”தமிழகத்தில் பல கட்சிகள் என்மேல் பல குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். அதற்கெல்லாம் பதலளித்தால் சரியாக இருக்காது” என்கிறார் அண்ணாமலை.

சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேசிய மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணாமலை வருவதற்கு காலதாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் வருவதற்கு முன்பாகவே கூட்டம் தொடங்கப்பட்டது. அண்ணாமலை ஏறத்தாழ 11.50 மணியளவில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், “உங்களிடையே மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். 3 ஆம் தேதியில் நடக்க இருந்த நிகழ்வு, நான் வரமுடியாத காரணத்தாலும் வேறு மூத்த தலைவர்களுக்கு முக்கிய பணி இருந்த காரணத்தினாலும் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “தமிழகத்தில் பல கட்சிகள் என்மேல் பல குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். அதற்கெல்லாம் பதலளித்தால் சரியாக இருக்காது. என் வேலையை நான் செய்கிறேன். எந்த பாதையில் நான் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளேன். பாஜக எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பது குறித்தும் தெளிவாக உள்ளேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com